திருவொற்றியூரில் ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை:
திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில், கத்தி வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த மூன்று இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பிய மீனவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரை துறைமுகம் பகுதியில், பர்மா வசந்த் (33), பிரதீப் (20), லத்தீஷ் (20) ஆகியோர் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்தனர். இச்சம்பவம் இடத்திற்கு அருகில் இருந்த மீனவர் சேத்தப்பனின் கவனத்திற்கு வந்தது.
“இந்த இடத்தில் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பியதற்குத் திட்டவட்டமாக எதிர்வினை அளித்த இளைஞர்கள், சீற்றமடைந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த சேத்தப்பன், உடனடியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்படினார்.
இதையடுத்து, குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

