பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை செய்து தந்ததாக தெற்கு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் உதவியிருக்கிறார்களா என்பதை விசாரிக்கும் நிலையில், அந்த இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
உள்ளூர் நபர்கள் இன்னும் யாரேனும் இதில் தொடர்புடையவர்களா என்பதை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


