6 டன் மரங்களை வெட்டி உள்ளதாக தகவல். வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை,

6 டன் மரங்களை வெட்டி உள்ளதாக தகவல். வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மோசூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு விளைநிலம் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலங்களை தமிழக அரசு வழங்கியது. இந்த நிலங்களை 30 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ கூடாது என விதிமுறை உள்ள நிலையில் மோசூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் விதிமுறைகளை மீறி அவரின் உறவினரான சித்திக்கு வழங்கிய அரசு நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அதில் இருந்த செம்மரம், வேப்பமரம், மாமரம் உள்ளிட்ட சுமார் 6 டன் அளவுக்கு மரங்களை வெட்டி உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் விசாரணை செய்த போது அந்த இடம் அவருக்கு கொடுக்கப்பட்ட இடம் இல்லை என்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் மரம் வெட்டி உள்ளது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் விசாரித்தபோது கிராம நிர்வாக அலுவலரும் வருவாய் ஆய்வாளரும் ஆற்காடு வட்டாட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வட்டாட்சியர் இடம் விசாரித்த போது கிராம நிர்வாக அலுவலரும் வருவாய் ஆய்வாளரும் தாக்கல் செய்த அறிக்கையின் பேரில் திமிரி காவல் நிலையத்தில் சி எஸ் ஆர் என் 216 /2025 எண்ணாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மரங்கள் எடுத்துச் செல்வதற்காக வந்த வாகனத்தின் எண் இருந்தும் இதுவரை வாகனத்தை பறிமுதல் செய்யவில்லை, வெட்டப்பட்ட மரங்களையும் பறிமுதல் செய்யவில்லை. எனவே இதுபோன்று அரசுக்கு எதிராக அரசு வழங்கிய நிலத்தை விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்…

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook