சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: மன உளைச்சலால் ஐ.டி. பொறியாளர் உயிரிழப்பு
சென்னை:
சென்னை விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே பாய்ந்து, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாலாஜி தாக்கு (வயது 39). தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வந்த இவர், வேலை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது தந்தை தெரிவித்ததாவது, “மன அழுத்தத்தால் கடந்த சில நாட்களாகவே பாலாஜி திகைப்பாகவும் புலம்பியபடியும் இருந்தார்” என தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலாஜிக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்

