ஜார்ஜியாவில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) கீழ் நடைபெற்ற மகளிர் உலக செஸ் கோப்பை தொடரில் இந்தியாவை பெருமைப்படுத்திய இளம் சதுரங்க வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பிக்கு, அமமுக்க தலைவர். டிடிவி. தினகரன் அவர்கள் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான போட்டியில் திவ்யா தேஷ்முக் தங்கப்பதக்கத்தையும், கோனேரு ஹம்பி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றதன் மூலம், மகளிர் உலக செஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனைகள் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று புதிய சரித்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் பெருமைமிகு சாதனை இந்திய மக்களுக்கும், இளம் சதுரங்க வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாகவும், திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோரின் சாதனைப் பயணம் தொடர்ந்து வலிமையாகவும் வெற்றிகரமாகவும் நீடிக்க வேண்டும் என தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். டிடிவி. தினகரன்.

