திருச்சி கண்டோன்மெண்ட் கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய 79 வது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது. கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் தில்ஷத் ஷா வழிகாட்டுதல் படி நிறுவன மனிதவள மேலாளர் தேவராஜ், கிளை மேலாளர் பிரசாத், சந்தைப்படுத்தல் பொறுப்பாளர் கனகராஜ், முதன்மை விற்பனையாளர் ஹரி, இளம் விற்பனையாளர் ஹேமா முன்னிலையில் மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்துவரும் சமூக செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானமும், அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகத்தையும் வைத்து கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றை எடுத்துரைத்து வரும் யோகா ஆசிரியர் விஜயகுமார் உழைப்பு அர்ப்பணிப்பை அங்கீகரித்து கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் பாராட்டுச் சான்றிதழையும் நினைவு பரிசினையும் வழங்கி கௌரவித்தனர்.

