வாலாஜாவில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பிரட் பழங்கள் வழங்கப்பட்டதுரா ணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கட்சியின் மாவட்ட செயலாளர் அப்ரார் அகமது தலைமையில் நடைபெற்றது.
மேலும் கொடியேற்றும் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைச்செயலாளர் அரிமா அசாருதீன் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்து கட்சியின் கொள்கை முழக்கங்களை வெளிப்படுத்தியதோடு கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்சியின் பத்தாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பிரட், பால், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். மேலும் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது நிகழ்வில் மாவட்ட பொருளாளர் நவாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார் 9150223444.