சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
Lakshmi Classic Homes Pvt. Ltd., என்ற தனியார் நிறுவனத்தை நடத்திவந்த அம்சவேனி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய சகோதரிகள், 26 பேரிடமிருந்து சுமார் ரூ.3.71 கோடி முதலீடு பெற்றனர். வீட்டுமனை வழங்குவதாக நம்பிக்கை அளித்தும், நிலம் தரப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், EOW – சென்னை காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி அவர்களை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


