மதுரை: சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் இறந்து மூன்று நாட்கள் ஆனதை மறைத்து, ‘சிகிச்சை’ என்ற பெயரில் பணம் வசூலித்ததாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு சாட்டியுள்ளனர்.
இதனால் அதிருப்தியடைந்த மாணவியின் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனைக்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி,
மருத்துவமனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

