திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம்.ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எஸ்.ஆர்.அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது
கல்லூரி முதல்வர் முனைவர் ரஞ்சித் குமார் தலைமையில்,
எஸ்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் முன்னிலையில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை தலைவர் ஜோசப் அருண் ஒருங்கிணைப்பில்,
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உட்பட பவர் சேகரிப்பினை காட்சி படுத்தி விளக்கினர்.
பண்டைய நாணயங்கள் பலவும், குறிப்பாக மூவேந்தர்களின் நாணயங்கள், சங்க காலத்தின் வரலாற்றையும், பொருளாதாரத்தையும் விளக்கும் வகையில், பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட சங்க கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட முத்திரைக் காசுகளை காட்சிப்படுத்தி தமிழக வரலாற்றையும், பொருளாதாரத்தை விளக்கினர்.ரோமானியக் காசுகள், டச்சுக்காரர்கள் வெளியிட்ட நாணயங்கள் போன்ற வெளிநாட்டு நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. இவை வணிக தொடர்புகளையும், பொருளாதார பரிமாற்றங்களையும் காட்டுவதை விளக்கினர். பிரிட்டிஷ் இந்தியா, குடியரசு இந்திய நாணயங்கள், பணத்தாள்கள் மற்றும் உலக பணத்தாள்களை காட்சிப்படுத்தி அதன் வரலாற்றை எடுத்துரைத்தனர். கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கண்காட்சியினை கண்டுகளித்தனர்.

