நாணயங்கள் மூலம் வரலாற்றை எடுத்துரைத்த சேகரிப்புக் கலைஞர்களுக்கு பாராட்டு!
திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது.
நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர் சிவகாமி சாத்தப்பன் முதல்வர் சாத்தப்பன் சாத்தப்பன் முன்னிலையில் துவங்கி வைத்தார்.
கண்காட்சியில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் , சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி உள்ளிட்டோர் நாணயங்கள் கூறும் வரலாற்றை எடுத்துரைத்தனர். நாணயங்கள் பணத்தாள்கள் சேகரிப்பு கலைஞர்களின் தனிப்பட்ட சேகரிப்பினை கொண்டு பள்ளி மாணவர்களிடையே குறிப்பிடத்தக்க கல்வி மதிப்பை சேர்ப்பதற்கும் கல்வி அனுபவத்தை பலப்படுத்திய முயற்சிக்கும் மதிப்புமிக்க பங்களிப்பினை பாராட்டி பிருந்தாவன் வித்யாலயாவின் தாளாளர் சிவகாமி சாத்தப்பன், முதல்வர் சாத்தப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஸ்வேஸ்வரன் முன்னிலையில் பாராட்டு சான்றிதழினை வழங்கினர்.
நாணயங்கள் கூறும் வரலாறு நிகழ்ச்சி பண்டைய காலத்தின் வரலாறு, கலை ,கலாச்சாரம், பாரம்பரியம் பொருளாதாரத்தை எடுத்துரைப்பதாகவும் இருந்தது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்.

