தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதை சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.
கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா மரணம் ஆணவக் கொலைக்குச் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அவரது தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இத்தகைய கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சமூகத்திற்கு பேராபத்து” எனக் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஜெயசூர்யா மரணம் குறித்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

