பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
மோன்தா புயல் காரணமாக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – 2000 கனஅடியில் இருந்து 4000 கனஅடியாக நீர்வெளேற்றம் உயர்வு
திருவள்ளூர், அக். 27:
மோன்தா புயலால் உருவாகியுள்ள கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்குத் திறக்கப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 2000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வெளேற்றம் 4000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடதமிழக கடலோரப் பகுதிகளுக்குப் புயல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை ஒட்டி, பூண்டி ஏரியின் நீர்மட்டம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால், தேவைக்கேற்ப நீர்வெளேற்றம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், குழந்தைகள் மற்றும் கால்நடைகள் ஆற்றங்கரை பகுதிகளுக்குச் செல்லாது பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பூண்டி ஏரி – கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறப்பு அதிகரிப்பு தற்போது புயல் எச்சரிக்கையின் மத்தியில் முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

