அரசு மகப்பேறு மருத்துவமனை. குழந்தை பிறந்தது முதல், வீட்டிற்குச் செல்லும் வரை பணம். இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக  இருப்பது யார்?

அரசு மகப்பேறு மருத்துவமனை. குழந்தை பிறந்தது முதல், வீட்டிற்குச் செல்லும் வரை பணம். இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது யார்?

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவ அறையில் பணிபுரியும் பெண்மணிகள்,ஆண் குழந்தை பிறந்தால் 1500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 1,000 ரூபாயும் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளனர். மற்றும் பிரசவ அறையில் சுத்தம் செய்பவர்களுக்கு பணம். பிரசவ அறையில் இருந்து அடுத்த அறைக்கு மாற்றுபவர்களுக்கும் பணம். தள்ளுவண்டியில் அமர வைத்து தள்ளுபவர்களுக்கும் பணம். குழந்தை பிறந்தவர்களை பார்க்கச் செல்வதற்கு வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு பணம், இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் பணம் பணம். ஏழை பாமரிய மக்கள்கள் இந்த மருத்துவமனை பிரசவ நிகழ்வில் சிக்கி தவிக்கின்றனர். 500 ரூபாய் இருக்கிறது வாங்கிக் கொள் என்றால். குழந்தையை யார் கழுவுவது, இந்த இடத்தை எல்லாம் யார் சுத்தம் செய்வது என்று மிரட்டி வருகின்றனர், அங்கு பணிபுரியும் பெண்கள். குழந்தைக்கு ஏதேனும் ஆய்விடுமோ என்ற பயத்தில் என்ன செய்வது என்று அறியாமல் உணவுக்கும், பேருந்துக்கும் வைத்திருக்கும் பணத்தை, மருத்துவமனையில் பணிபுரியும் பெண்களிடம் கொடுத்து தவிக்கும் ஏழை பாமரிய மக்கள். இந்தப் பணங்கள் எல்லாம் யாரிடம் செல்கிறது, இதற்கு பின்னாடி யார் இருக்கிறார்கள் என்பதே சமூக ஆர்வலரின் கேள்வி சாதாரணமாக இந்த இடத்தில் யாரும் பணம் வசூல் செய்ய முடியாது அப்படி இருக்கும் பட்சத்தில் பண வேட்டையில் ஈடுபடும் இந்த பெண்மணிகளின் பின்னாடி யார் இருக்கிறார்கள். உடனடியாக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook