சென்னை:
சென்னை அம்பத்தூர் கள்ளி குப்பத்தைச் சேர்ந்த ஹேமநாத் (வயது 18), BCA முதலாம் ஆண்டு மாணவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.
ஹேமநாத், தனது நண்பரை சட்டவாக்க ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு வீடு திரும்பும்போது, மணமேடு பகுதியில் எதிரே வந்த குட்டியானை வாகனம் மேதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டார்.
விபத்தில் மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மிகுந்த மனவலிமையுடன் அவருடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் தெரிவித்தனர்.
அதன்படி, ஹேமநாதின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் வாழ்வு மற்றும் இரண்டு கண்கள் என மொத்தம் 7 உறுப்புகள், தமிழக அரசு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் வழியாக பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு அரசு விதிமுறைகளுக்கிணங்க தானமாக வழங்கப்பட்டன.
இளமையில் உயிரிழந்த ஹேமநாத் தனது உறுப்புகள் வழியாக ஏழு பேருக்குப் புதிய உயிர் அளித்துள்ளார். அவரது தன்னலமற்ற தானம், தன்னுடைய உயிரிழப்பை உருவான பல உயிர்கள் வாழும் அருவிழாவாக மாற்றியுள்ளது. இது, நம்மிடையேயுள்ள உயிர் உறுப்புத் தான விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

