சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தில் காப்பர் கலந்துள்ளதால், அதன் எடை குறைந்ததாக புகார் எழுந்துள்ளது.
மொத்தம் நான்கரை கிலோ தங்கம் இந்த சிலைகளுக்கு வழங்கப்பட்டதாகும். ஆனால், தற்போது எடை குறைவாக இருப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்புத் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


