கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே:
இன்றைய மாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்கத்தில் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேப்பூர் அருகே உள்ள கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கணிதா ஆகியோர் மீது மின்னல் விழுந்தது.
நால்வரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே சம்பவத்தில் தவமணி என்ற பெண் கடுமையாக காயமடைந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மின்னல் தாக்கிய இடம் முழுவதும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ⚡


