திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமூக செயற்பாட்டாளர் அவேர்னஸ் அப்பாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சட்டை, பேண்ட் தலைக்கவசம், மோட்டார் வாகனம் முழுக்க சாலை விழிப்புணர்வு வாசகத்துடன் வித்தியாசமாக வலம் வரக்கூடியவர் சிவசுப்பிரமணியம் என்ற அவேர்னஸ் அப்பா ஆவார் 11நவ59ஆண்டில் பிறந்தவர். நாமக்கல்.பரமத்தி வேலூரை பூர்வீகமாக கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர், சைக்கிள் கடை வைத்திருந்தவர், பிறகு திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தார். இவரது வாழ்க்கைத் துணை ஜானகி அம்மையார். நுரையீரல் புற்று நோயால் காலமானார் அதைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் வாரிசு மூவருக்கும் திருமணம் செய்து விட்டார்.
உறுப்பு தானம், சாலை விழிப்புணர்வு என விழிப்புணர்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவரை இளைஞர்கள் அவேர்னஸ் அப்பா என்று அழைக்கின்றனர்.
திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து சுமார் ஒரு கோடி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததை யூத் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
அவேர்னஸ் அப்பா விழிப்புணர்வு பிரச்சார சாதனையை பாராட்டி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், இனிய நந்தவனம் மாத இதழ் ஆசிரியர் சந்திரசேகரன், ஒயிட் ரோஸ் சமூக நல சங்கத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் பாராட்டி சிறப்பு செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் சிறக்க வாழ்த்தினர்.

