திபாவளி பண்டிகை முன்னிட்டு ஆயுதப்படையில் பட்டாசு விற்பனைக்கு தொடக்கம்!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில், திபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராமச்சந்திரன் (DCRB), வெங்கடகிருஷ்ணன் (IUCAW), பல்வேறு காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விற்பனை மையத்தில் காவலர்களின் குடும்பங்களுக்கு மானிய விலையில் மற்றும் பொதுமக்களுக்கு சலுகை விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் சுற்றுச்சூழல் நட்பாகவும் திபாவளியை கொண்டாட மாவட்ட காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

🖊️ செய்தி: மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்
📞 செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444

