வேலூரில் பீமா ஜூவல்லரி புதிய தங்க மாளிகையை பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி திறந்து வைத்தார்!
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் கிரின் சர்க்கிள் அருகே, கேரள மாநிலத்தின் பிரபல நகை நிறுவனமான பீமா ஜூவல்லரியின் புதிய கிளை இன்று (அக்.12) திறப்பு விழாவுடன் துவங்கியது.
இந்த சிறப்புவிழாவை தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி தங்க நகை மாளிகையின் கதவை திறந்து வைத்து துவக்கி வைத்தார்.
அதிசயமான ஒன்று என்னவெனில் — இந்த திறப்பு விழா தினம் பீமா ஜூவல்லரியின் 100ஆவது ஆண்டு நிறைவு நாளாகவும் அமைந்தது!
💎 திறப்பு விழா சிறப்புகள்
இவ்விழாவில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் திறப்பு விழா சலுகைகளில் பங்குபெற்று மகிழ்ந்தனர்.
நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பி. கோவிந்தன், நிர்வாக இயக்குனர் எம். எஸ். சுஹாஸ் மற்றும் குடும்பத்தினர் வாடிக்கையாளர்களையும் முக்கிய விருந்தினர்களையும் அன்புடன் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினர்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர்ஆனந்த் அவர்களும் குடும்பத்துடன் வருகை தந்து விழாவை சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📸 மாவட்ட சிறப்பு செய்தியாளர்: ஆர்ஜே. சுரேஷ்
📞 செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 91502 23444

