மருத்துவமனையிலிருந்தும் டிராமா நடத்தினார் – முதல்வர் ஸ்டாலின் மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம்
சென்னை:
முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்ட ஈபிஎஸ், “உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இருந்த முதல்வருக்கு நான் நலம் பெற வாழ்த்தினேன். ஆனால் அங்கும் கேமரா வைத்து அதிகாரிகளை கூட்டி டிராமா நடத்துகிறார். இது அரசியல் நாடகம் தவிர வேறில்லை” என சாடினார்.
அவரது வெளிநாட்டு பயணத்தை குறித்தும் ஈபிஎஸ் விமர்சித்து, “18 நாட்கள் அமெரிக்கா சென்றிருந்தீர்கள். அப்போது மக்களை பற்றி சிந்திக்காமல் சைக்கிள் ஓட்டியீர்கள். ஆனால் தமிழகத்தில் வரும்போது மக்கள் முன் நாடகமாடுகிறீர்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.
ஸ்டாலினின் ஆட்சியமைப்பை தொடர்ந்து கேள்விக்குட்படுத்தி வரும் ஈபிஎஸ், “மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல், விளம்பர அரசியலில் மட்டுமே ஆழ்ந்திருக்கிறார் முதலமைச்சர்” என தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கள், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

