சென்னை, செப்.2–
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
கே.கே.நகர், தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கிய இந்த சோதனையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், சான்றுகள் என்பன பறிமுதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு தொழிலதிபர் அரவிந்த் என்பவரின் இல்லத்திலும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.


