வாக்காளர் பட்டியல்களில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூன் 24ஆம் தேதியிட்ட உத்தரவின் கீழ், இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட கடமையின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்ட பரந்த அளவிலான திருத்தம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியதை தொடர்ந்து, இந்த தேசிய அளவிலான சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் பங்கேற்பும், சீரான தேர்தல் நடைமுறைகளும் வலுப்பெறுவதே இந்த முயற்சியின் இலக்காகும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

