காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ், நீதிமன்ற உத்தரவின் பேரில் சீருடையுடன் நேரடியாக கைது செய்யப்பட்டார்.
முருகன் என்ற நபர் அளித்த புகாரில், ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
காஞ்சிபுரம் நீதிமன்றம், அவரை வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த அதிர்ச்சி சம்பவம், காவல்துறையினரிடையே பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

