சென்னை :
புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டர் எனப் பெயர் பெற்ற மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி, டாக்டர் வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார்.
மருத்துவ துறையில் பல தசாப்தங்களாக சேவை செய்து வந்த ஜெயச்சந்திரன் அவர்களுக்கு துணைவியாக இருந்த வேணி ஜெயச்சந்திரன், சமூகப்பணியிலும், மருத்துவ சேவையிலும் முக்கிய பங்காற்றி வந்தார்.
இவர் மறைவுக்கு அரசியல், சமூக, மருத்துவ வட்டாரத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

