வாஷிங்டன், ஆக.31–
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஜி.ஆலன் செங் மீது 7 பெண் நோயாளிகளை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு ஒரு பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அவரது வீட்டுக்கு சென்றிருந்த ஆலன், சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. சம்பவம் குறித்து அந்த பெண் தனது வீட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர், அவர் அளித்த புகாரின் பேரில் ஆலன் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, இதேபோன்ற முறையில் மேலும் 7 பெண் நோயாளிகளை பலாத்காரம் செய்ததும் அம்பலமானது.
இதனை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆலனுக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, அவர் இனி மருத்துவ பணியில் ஈடுபடுவதற்கும் தடை விதித்தது.

