சென்னை: மணலி திமுக கவுன்சிலரும் மண்டலக்குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் மற்றும் திருவெற்றியூர் மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அவரது சகோதரர் ஏ.வி. முருகன் மீது பண மோசடி , ஆழ்கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலம் வாங்க ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு , ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்ததாக புகார்; நிலத்திற்கான தொகையை கேட்டபோது ஆட்கள் வைத்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரை கடத்தி தாக்கிய புகாரின் ஏ.வி.ஆறுமுகம் மற்றும் அவரது சகோதரர் ஏ.வி.முருகன் மேல் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினார், காவல்துறை ஏன் இதுவரை இவர்களை கைது செய்யவில்லை இவர்களுக்கு பின்புலமாக தமிழக முதல்வர் அல்லது துணை முதல்வர் இருக்கிறார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்…

