மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை, அக். 30 –

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மாம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இராஜா (வயது 36) மற்றும் நெமிலி வட்டம் தென்மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தன் (வயது 22) ஆகியோர் தங்களுக்குத் தேவையான சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மனு அளித்தனர்.

அந்த மனுவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 1.26 இலட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலி மற்றும் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி ஆகியவை வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா, இரு மாற்றுத்திறனாளிகளுக்கும் நாற்காலிகளை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

 

அரசு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Oplus_131072

📞 செய்தி & விளம்பர தொடர்புக்கு:

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் – 91502 23444

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook