சென்னை, மார்ச் 6 :
சென்னையில் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை அருகில், தெய்வத்திரு ஐயா மனோகர் பூபதி அவர்களின் நினைவாக தொடங்கப்பட்ட மனோகர் பூபதி அறக்கட்டளை சார்பில் இன்று (மார்ச் 6) முதல் தினசரி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினமும் மதியம் 12.00 மணியளவில் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அன்னதான சேவையை மனோகர் பூபதி அறக்கட்டளையின் நிறுவனர் அன்னதான வள்ளல் எம். ஹரி பிரபு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். சமூக நலனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அன்னதான திட்டம் மூலம் தினமும் பலர் பயன்பெறுவார்கள் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.



