சுங்கச்சாவடி கட்டணம் என்பது ஆண்டுதோறும் தனிமனித வருமானமாகவும் கமர்சியல் கண்ணோட்டமாகவே பார்க்கப்படுகிறது இதனை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்த்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புமாநிலதலைவர் விக்ரமராஜா. ராணிப்பேட்டை மாவட்டம்திமிரி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாவட்ட இளைஞரணி துவக்க விழா மற்றும் ரத்ததான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இருந்தார் அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட விக்கிரம ராஜா பேசியதாவது, ஜி.எஸ்.டி மூலமாக பல்வேறு வணிகர்கள் கடைகளை காலி செய்யும் அவலம் ஏற்பட்டு உள்ளது வணிகவரித்துறை மத்திய அமைச்சர் சட்டங்களை எளிமைப்படுத்தி வரிகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும், அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, வாலாஜா ஆகிய பகுதிகளில் நகராட்சி கடைகள் கட்டும் பணிகள் முடிவு பெறும் நிலையில் காலங்காலமாக அங்குள்ள வணிகர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தார். வணிகர்களின் கடைகளுக்கு வாடகை தொகை அதிகரித்திருப்பது குறித்து அமைச்சரிடம் பேசி இருப்பதாகவும் அதற்கு பொது வெளி வாடகை விட 25% குறைப்பு செய்ய இருப்பதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். சுங்கச்சாவடி கட்டணம் என்பது ஆண்டு தோறும் தனிமனித வருமானமாகவும் கமர்சியல் கண்ணோட்டமாகவே பார்க்கப்படுகிறது இதனை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆண்டு தோறும் சுங்க கட்டணம் உயர்த்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்

