ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என அறிவித்ததால் நீண்ட வரிசையில் நின்றபடி அலைமோதிய கூட்டம்.
பிரியாணி இன்று தவிர்க்க முடியாத உணவாக மாறி உள்ளது. என்னதான் கட்டுபாடாக இருந்தாலும் பிரியாணியின் வாசம் நம்மை ஈர்த்து விடுகிறது.
மக்களின் உணவு விருப்பத்தை அறிந்து பல்வேறு பிரியாணி கடைகள் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு விசாரம் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வாலாஜா எம்பிடி ரோடு அணைக்கட்டு சாலையில் ஜப்பர் சிக்கன் மட்டன் என்ற பெயரில் புதிய பிரியாணி திறப்பு விழா நடைபெற்றது.
அப்படியிருக்க, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவிப்பு செய்தனர்.
அதைப்பார்த்த பிரியாணி பிரியர்கள் கடையின் முன்பாக போட்டா போட்டி போட்டு கொண்டு அணிவகுத்து நீண்ட வரிசையில் நின்றபடி பிரியாணியை வாங்கிச் சென்றனர். முதல் நாள் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் திரளாக திரண்டு பிரியாணி வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்..