ராணிப்பேட்டையில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் Dr. ஜி. தர்மராஜன் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மாவட்டத்தின் கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்த தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.
ரவுடிகள் மீது நடவடிக்கை, நீதிமன்ற நிலுவை வழக்குகள் மற்றும் பிடிகட்டளையில் உள்ள எதிரிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (POCSO வழக்குகள்) தொடர்பாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கள்ளமதுவின் விற்பனை, மதுபான கடத்தல், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்க தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சட்டவிரோத மணல் கடத்தல், சூதாட்டம் மற்றும் லாட்டரி விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.
🗞️ மாவட்ட சிறப்பு செய்தியாளர்: ஆர்.ஜே. சுரேஷ்
📞 செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 91502 23444


