இந்திய சுதந்திர தினவிழா
திருச்சி மேலப்புதூர் புனித ஜீலியானாள் நடுநிலைப்பள்ளி சார்பில் இந்திய சுதந்திர தினவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் மெர்சி தலைமை தாங்கினார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களில் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. உ. சி, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன்,மருது சகோதரர்கள் , மகாகவி பாரதியார் , வீரமங்கை வேலுநாச்சியார், திருப்பூர் குமரன் வேடமணிந்து சுதந்திர போராட்ட நிகழ்வினை சொற்பொழிவாற்றியும் நாடகம், நடனம், பட்டிமன்றம் என சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகத்தையும், போராட்டத்தையும் எடுத்துரைத்தனர். முன்னதாக பள்ளி ஆசிரியர் கிளமெண்ட் செல்வி வரவேற்க, நிறைவாக வளர்மதி நன்றி கூறினார்.

