சென்னை, ஆக.30–
சென்னை ராயபுரம் பகுதியில், கட்டிட தொழிலாளி ஒருவர் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை சோமுசெட்டி 1-வது தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (39) கட்டிட தொழிலாளி ஆவார். நேற்று முன்தினம் இரவு மது அருந்திய நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்தின் 3-வது மாடி மொட்டைமாடியில் தனியாக தூங்கச் சென்றார்.
அப்போது தவறி கீழே விழுந்த அவர், தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

