சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் 50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்துகொண்டு வட்டார மருத்துவ அலுவலக கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகளுக்கு பொருட்கள் தரமாகவும், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புதிய ஆரம்ப சுகாதார கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதி கட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், செல்வி, ஒன்றிய கவுன்சிலர் சசிகலா கார்த்திவழக்கறிஞர் சுகுமாரன், ஊராட்சி மன்ற தலைவர் பெருங்காஞ்சி வே.ஹேமச்சந்திரன் மற்றும் மருத்துவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.