அரக்கோணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் நிர்வாகி வீட்டு காவலில் வைப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆறாவது ஆண்டு விழா நாளை மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 9 மணி அளவில் அரக்கோணம் கடற்படை விமானதளத்திற்கு தனி விமான மூலம் வருகை தர உள்ளார். அங்கிருந்து வாகனம் மூலமாக சாலை மார்க்கத்தில் நாளை நிகழ்ச்சி நடைபெற உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்திற்கு சென்று அங்கு ஓய்வெடுத்து. பின்னர் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு மீண்டும் காலை 10:50 மணிக்கு சாலை மார்க்கமாக அரக்கோணம் இந்திய கடற்படை விமானதளத்திற்கு வந்து அங்கிருந்து தனி விமான மூலமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர் நரேஷ் குமார், அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்குள் காவலில் வைக்கப்பட்டார்.
இதனை அடுத்து அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட அசோக் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வீட்டு காவலில் காவல்துறையினர் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளார்.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் (9150223444).