- மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!!
வாலாஜாவில் வேகத்தடையால் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி சாலையில் கிழே விழுந்து தலையில் பலத்த ரத்த காயம்.!!!
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திற்கு முன்பாக ரூபாய் 13 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் 24 மணி நேரமும் பொதுமக்களின் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் மேம்பால பணிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் பூமி பூஜை தொடங்கி வைத்து மேம்பாலம் அமைக்கும் கட்டுமான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனகரக வாகனங்கள் செல்லும் வகையில் ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா வழியாக செல்லும் சாலை இருபுறமும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக தற்காலிக தார் சாலைகள் அமைக்கப்பட்டது.
இதனால் தார் சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால் இரு சாலைகளில் வேகத்தடை அமைக்கப்பட்டது இதன் காரணமாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் எதிரே போடப்பட்டுள்ள வேகத்தடையில் ரிப்லெக்ட் லைட் எதுவும் இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக விபத்துக்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது..
இதனையடுத்து வாலாஜாபேட்டை மஞ்சக்காமாலை தெருவை சேர்ந்த கோகிலா (60) என்ற வயது முதிர்ந்த பெண்மணி அவருடைய மகளுடன் ராணிப்பேட்டையில் இருந்து வாலாஜா நோக்கி சரியாக விடியற்காலை 5 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது சாலையில் இருந்த வேகத்தடை இருப்பதை பார்க்காததால் வேகத்தடையில் மோதி கோகிலா நிலை தடுமாறி சாலையில் விழுந்ததால் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் மேலும் இச்சாலையில் வேகத்தடை காரணமாக 20-க்கும் மேற்பட்டோர். இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி வருவது என்பது குறிப்பிடத்தக்கது..
எனவே தார் சாலை இருபுறமும் வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் மற்றும் ரிப்லைக் லைட் ஆகியவை அமைத்தால் மட்டுமே இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிக அளவில் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் மட்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சு
ரேஷ்குமார்.