ஆபத்தை உணராத கல்லூரி மாணவிகள்: பஸ்சில் தொங்கியபடி பயணம் – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?

ஆபத்தை உணராத கல்லூரி மாணவிகள்: பஸ்சில் தொங்கியபடி பயணம் – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணி நோக்கி புறப்படும் அரசு பேருந்துகளில், கல்லூரி மாணவிகள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாணவர்களுக்கு போதுமான பேருந்துகள் இல்லாததும், பேருந்து நெரிசலும் காரணமாக சிலர் இப்படிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும், மாணவிகள் கூட படியில் தொங்குவது உயிருக்கு ஆபத்தான நிலையாக மாறி உள்ளது.

இந்த ஆபத்தான பழக்கம் தினசரி காட்சியாக மாறியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து துறையும் இதை கவனிக்காமல் இருப்பது குறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமா என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

📸 சிறப்பு செய்தியாளர்: ஆர்ஜே. சுரேஷ்

📞 செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 91502 23444

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook