செஞ்சி நாயக்கர்கள் வெளியிட்ட திருவண்ணாமலை பொறிப்புகளை கொண்ட காசு
திருச்சி பிருந்தாவன் வித்யாலயா ஐசிஎஸ்இ பள்ளி சார்பில் “காலத்தின் எதிரொலிகள்” நிகழ்ச்சி புத்தகங்கள் இல்லாத தின நிகழ்வில் நடைபெற்றது.
நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி தாளாளர் சிவகாமி சாத்தப்பன் முதல்வர் சாத்தப்பன் முன்னிலையில் துவங்கி வைத்தார்.
கண்காட்சியில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் , பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் நாணயங்கள் கூறும் வரலாற்றை எடுத்துரைத்தனர். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் செஞ்சி நாயக்கர்கள் வெளியிட்ட திருவண்ணாமலை பொறிப்புகளை கொண்ட காசு குறித்து பேசுகையில்,
தமிழகத்தில் சுவாரஸ்யமான நாணயங்கள் இடைக்கால தென்னிந்திய திருவண்ணாமலை உள்ளூர் நாணயங்கள் 16 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலை அருணாத்ரி மலையை மையக் கொண்டு இந்த நாணயத்தை வெளியிட்ட உள்ளூர் ஆட்சியாளர்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. இந்த மலை அருணகிரி, அருணாத்ரி, அண்ணாமலை, அருணாசலம், அருணை,சோணகிரி மற்றும் சோனாசலம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அருணாத்ரி மலையை மையமாகக் கொண்டு செஞ்சி நாயக்கர்கள் வெளியிட்ட நாணயம் தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டவை.காசின் முன் பக்கத்தில் இரண்டு மலை முக்காடு உள்ளது மலையின் இரண்டு பக்கங்களிலும் சூரியன் சந்திரன் உள்ளது பின்பக்கத்தில் “அருணாத்ரி” இரண்டு வரிகளில் தெலுங்கில் பொறிக்கப்பட்டுள்ளது என்றார். திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஸ்வேஸ்வரன்
நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து இருந்தார்.நாணயங்கள் கூறும் வரலாறு நிகழ்ச்சி பண்டைய காலத்தின் வரலாறு, கலை ,கலாச்சாரம், பாரம்பரியம் பொருளாதாரத்தை எடுத்துரைப்பதாகவும் இருந்தது. நாணயங்கள் கூறும் வரலாறு கண்காட்சியினை பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்.

