மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னை கண்ணகி நகர்: மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னை கண்ணகி நகர் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று இன்று அதிகாலை நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி (40) அவர்கள், காலை வேலைக்கு செல்லும் போது மழை நீரில் மூழ்கியிருந்த மின்கேபிள் மீது தவறுதலாக கால்வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விபத்து அதிகாலை 4.50 மணியளவில் ஏற்பட்டது.

உயிரிழந்தவருக்கு 12 வயது பெண் குழந்தையும், 10 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்த இவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்கேபிள்கள் சாலையில் அபாயகரமாக கிடப்பதாகவும், இதுகுறித்து பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக சாலைகளில் கிடப்பதாக, இதுகுறித்து அறப்போர் இயக்கம் முன்பே புகார் அளித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

“அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்?” என்று மக்கள் வினவியுள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook