முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பதிவில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் பிறந்த நாளை, அன்னையர் உள்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம். என்று குறிப்பிட்டுள்ளார்.