திருச்சிராப்பள்ளி, ஜன.26 : உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிரேதங்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருது வழங்கப்பட்டது. சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அமிர்தம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருக்கு விருது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக
Category: பொழுதுபோக்கு
அகில இந்திய வானொலி பண்ணை வானொலி – 60ஆம் ஆண்டு வைர விழா
திருச்சி அகில இந்திய வானொலியின் பண்ணை வானொலி சேவை தொடங்கி அறுபதாம் ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு, “திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர், யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள்
சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கல்
திருச்சி, டிசம்பர் 17 : பெயர், விலாசம், அடையாளம் தெரியாததும், உரிமை கோரப்படாததும் ஆகிய ஆதரவற்ற அனாதை பிணங்களை மனிதநேயத்துடன், கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு ‘சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய
உறையூர் சோழன்பாறை கல்வெட்டு – காலத்தின் சுவடுகளைச் சொல்லும் மலைக்குன்று
திருச்சிராப்பள்ளி | சிறப்பு செய்தியாளர் திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து, “திருச்சி – ஓர் பார்வை, ஓர் பயணம்” என்ற தலைப்பில் மரபு நடைப் பயணத்தை உறையூர் பகுதியில் மேற்கொண்டனர். இந்த பயணத்தில், திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர்
உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் திருச்சியில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வரலாறு ஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது . தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொதுச்
துணிப் பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம் ஆர் தயாநிதி நினைவு வித்யாசாலா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் துணிப்பைகளை பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்
வாட்ஸ்ஆப்பில் மொழிபெயர்ப்பு வசதி விரைவில்!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப்பில், புதிய வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது பயன்பாட்டுக்குள் உள்ள செய்திகளை நேரடியாக மொழிபெயர்க்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த புதிய அப்டேட்டின் மூலம், பல்வேறு மொழிகளில் வரும் செய்திகளை உடனடியாகத் தங்களுக்குப் புரியும் மொழிக்கு மாற்றிக் கொள்ள முடியும். உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழங்குடியின பெண் கண்டெடுத்த 3 வைரங்கள்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள வைரச் சுரங்கத்தில், ராஜ்பூரை சேர்ந்த பழங்குடியின பெண் வினிதா கோண்ட் 3 வைரங்களை கண்டெடுத்துள்ளார். வினிதா மற்றும் சிலர் குத்தகைக்கு எடுத்திருந்த அந்தச் சுரங்கத்தில், 1.48 காரட், 20 சென்ட் மற்றும் 7 சென்ட் எடை கொண்ட வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை விரைவில் ஏலத்திற்கு விடப்படவுள்ளன. பல லட்ச ரூபாய்களுக்கு இவை ஏலம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வைர

