ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 28: விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் திருவிழாக்கள், பக்தர்களிடையே பெரும் பரவசத்தையும் பக்திப் புனிதத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர உற்சவம், கடந்த ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று காலை திரு ஆடிப்பூர திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரை வடம்
Category: ஆன்மிகம்
இராஜகோபாலன் ஐய்யாவுக்கு பக்திப் பெருமை சாலும் நமஸ்காரம்
102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் குமுதம் முன்னாள் ஜோதிடர் இராஜகோபாலன் ஐய்யாவுக்கு பக்திப் பெருமை சாலும் நமஸ்காரம் சென்னை, ஜூலை 28: பத்திரிகை உலகிலும், ஜோதிடத் துறையிலும் தனிச்சிறப்பு பெற்றவர் ‘குமுதம்’ வார இதழின் முன்னாள் ஜோதிட ஆசிரியர் இராஜகோபாலன் ஐய்யா. இந்த ஆண்டு அவர் தனது 102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பல தசாப்தங்களாக ஜோதிட உலகில் நீடித்து, ஆயிரக்கணக்கான வாசகர்களுக்குப் பயனளித்த அவரது எழுத்துக்கள், ‘குமுதம்’ வார
திருச்செந்தூரில் ஆடி அமாவாசை அற்புதம் – 100 அடி வரை உள்வாங்கிய கடல்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அரிய இயற்கை நிகழ்வு ஒன்று சிறப்பாக பதிவாகியுள்ளது. கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி, கடற்கரை பகுதி பசுமை நிற பாசிபடிந்த பாறைகளால் அலங்கரிக்கப்பட்டது. பவுர்ணமி, அமாவாசை போன்ற சந்திர நாள்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் இயற்கையாகவே நிகழ்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய அமாவாசையிலும், கடல் அலைகள் இல்லாத நிலையில் குளம் போல் அமைதியாகக் காட்சியளித்தது. இதனை பார்க்க
அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவ கடைசி நாள் தேரோட்டம்.!
ராணிப்பேட்டை மாவட்டம் கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவ கடைசி நாள் தேரோட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.! வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும்
திமிரி அருகே மகா கும்பாபிஷேக பெருவிழா!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி மருத்துவாம்பாடி கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிள்ளையார், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பஜனை கோயில், ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ நவகிரகம் ஆகிய திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலைகள் அமைத்து பல்வேறு ஓம திரவியங்கள் கொண்டு வேள்வி பூஜை செய்த புனித கலச நீர்
20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள். சிறப்பு பூஜை அபிஷேகம். ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி ,வள்ளி, தேவசேனா சுவாமிக்கும் பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் மலர்மாலை பல மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட
அருள்மிகு ஸ்ரீ குமர முருகன். மாசி மாத கிருத்திகை முன்னிட்டு. ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குமர முருகன் சுவாமி திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு மூலவர் குமரமுருகன் சுவாமிக்கும், உற்சவர் சுப்ரமணிய சுவாமி ,வள்ளி, தேவசேனா சுவாமிக்கும் சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து, பட்டு வஸ்திரம் மலர்மாலை பல மலர்கள் கொண்டு அலங்கார செய்யப்பட்டு தங்க ஆபரணங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீப ஆராதனைகள் நடைபெற்றது.
மயானக்கொள்ளை திருவிழாவில் அம்மன் வேடமிட்டு வதம் செய்யும் காட்சியினை கண்டு களித்த மக்கள்.!!!!
ராணிப்பேட்டை அருகே மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சூலாயுதத்தைக் கொண்டு ஒருவரை ஆக்ரோஷத்தோடு வதம் செய்யும் தத்ரூபமான காட்சியை கூடியிருந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் பெங்களூர் செல்லும் பழைய பேருந்து நிலையத்தில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பிஞ்சி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக அம்மன், சிவன், வராஹி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் சிலைகளை பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டது.. மேலும் வைக்கப்பட்ட
மகா சிவராத்திரியின் சிறப்புகள் 20!
1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது. 2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும். 3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர். 4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல

