ஓர் பார்வை… ஓர் பயணம்! மதுரை ஆனைமலை — மரபு வழி ஆய்வுப் பயணம் மதுரை ஆனைமலையின் வடக்குச் சரிவில் அமைந்துள்ள முருகன்–தெய்வானை இணைக்குரிய குடைவரை கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில், திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மரபு வழி ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தில் வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், முகமது ஜுபேர், சுடுமண்
Category: ஆன்மிகம்
ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்
திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், 36ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாணம் இன்று (நவம்பர் 1) வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திருமண வீட்டாராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. குப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமையேற்று விழாவை சிறப்பித்தனர். மேலும், ஏழாவது வார்டு மாநகர மன்ற உறுப்பினர் கே. கார்த்திக்,
இந்து ஜனசேனா அலுவலகத்திற்கு விஜயம்
ஓசூர் ஆன்மீக குரு முரளி மோகன் குருஜி – இந்து ஜனசேனா அலுவலகத்திற்கு விஜயம் சென்னை: இந்து ஜனசேனா நிறுவனத் தலைவர் மற்றும் அதற்வன வேத ஆராய்ச்சியில் பல பி.எச்.டி பட்டங்களை பெற்றதோடு, பல சீடர்களை வழிநடத்தி மக்களின் துன்பங்களை போக்கி வந்துவரும் முரளி மோகன் குருஜி, ஓசூரில் ஜோதி பீடம் ஆசிரமத்தை நிறுவி ஆன்மீக குருவாக திகழ்ந்து வருகிறார். இவரது தலைமையில், இந்து சமய ஒற்றுமை மற்றும் சமூக
60-வது ஆண்டு ஆடித் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னை, ஆக.15: தண்டையார்பேட்டை 38-வது வடக்கு வட்டம், பட்டேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் 60-வது ஆண்டு ஆடித் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ். முத்துசெல்வம் தலைமையில், வட்டக் கழகச் செயலாளர் ஆர். வேல்முருகன் ஏற்பாட்டில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 108 பெண்கள் பால்குடம் சுமந்து உற்சாகமாக பங்கேற்றனர். பால்குட ஊர்வலத்தை வடசென்னை
சங்கரன்கோவிலில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழா, கடந்த ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இன்று (செவ்வாய்) திருவிழாவின் ஒன்பதாம் திருநாளையொட்டி, அதிகாலை கோமதி அம்பாள் சாமியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். பக்தர்களின் கோஷங்கள் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க பக்தி பேரொளியில்
ஆடிப் பெருக்கு திருவிழா: தமிழர்களின் பண்டைய பாரம்பரியம்
சென்னை: தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகையாகக் கருதப்படும் ஆடிப் பெருக்கு இன்று மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் மிகப் பழமையான பண்டிகை எனக் கருதப்படும் ஆடிப்பெருக்கு, ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாக நட்சத்திரங்களையும், கிழமைகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்டிகைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் நாளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா என்பதும் சிறப்பம்சமாகும். இந்த நாளில், காவிரி உள்ளிட்ட ஆறுகள்
தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் – ராஜா அலங்கார தரிசனம்
ஈரோடு ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் – ராஜா அலங்கார தரிசனம் ஈரோடு: ஈரோடு ஸ்ரீ தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலையில் சிறப்பு அபிஷேக விழா ஆன்மிக பூர்வமாக நடைபெற்றது. வேத மந்திர ஓசையுடன் பால், தயிர், பன்னீர், தேன் உள்ளிட்ட பூரணக் கும்பங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி பொன்னாடை, ரத்தினகிரீடம், பூங்கிரீடம் அணிந்து ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலம்!
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 28: விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் திருவிழாக்கள், பக்தர்களிடையே பெரும் பரவசத்தையும் பக்திப் புனிதத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர உற்சவம், கடந்த ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று காலை திரு ஆடிப்பூர திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரை வடம்
இராஜகோபாலன் ஐய்யாவுக்கு பக்திப் பெருமை சாலும் நமஸ்காரம்
102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் குமுதம் முன்னாள் ஜோதிடர் இராஜகோபாலன் ஐய்யாவுக்கு பக்திப் பெருமை சாலும் நமஸ்காரம் சென்னை, ஜூலை 28: பத்திரிகை உலகிலும், ஜோதிடத் துறையிலும் தனிச்சிறப்பு பெற்றவர் ‘குமுதம்’ வார இதழின் முன்னாள் ஜோதிட ஆசிரியர் இராஜகோபாலன் ஐய்யா. இந்த ஆண்டு அவர் தனது 102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பல தசாப்தங்களாக ஜோதிட உலகில் நீடித்து, ஆயிரக்கணக்கான வாசகர்களுக்குப் பயனளித்த அவரது எழுத்துக்கள், ‘குமுதம்’ வார
திருச்செந்தூரில் ஆடி அமாவாசை அற்புதம் – 100 அடி வரை உள்வாங்கிய கடல்!
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அரிய இயற்கை நிகழ்வு ஒன்று சிறப்பாக பதிவாகியுள்ளது. கடல் நீர் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி, கடற்கரை பகுதி பசுமை நிற பாசிபடிந்த பாறைகளால் அலங்கரிக்கப்பட்டது. பவுர்ணமி, அமாவாசை போன்ற சந்திர நாள்களில் இந்த மாதிரியான மாற்றங்கள் இயற்கையாகவே நிகழ்வதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய அமாவாசையிலும், கடல் அலைகள் இல்லாத நிலையில் குளம் போல் அமைதியாகக் காட்சியளித்தது. இதனை பார்க்க

