சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டி.ஜி.பி. பதவிக்கான காலம் நிறைவடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தகுதியான அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சிக்கு பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழக அரசு வெங்கட்ராமனை சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமித்திருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பொறுப்பு டி.ஜி.பி. நியமித்த தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

