திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி
தாளாளர் அருட்பணி ஜெரால்டு பிரான்சிஸ் சேவியர் தலைமையில்,
தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், உதவி தலைமை ஆசிரியர்கள் அருள்ராஜ் பிலிப், ஆரோக்கிய சாமி,
ராபர்ட் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் லூயிஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி
உள்ளிட்டோர் தனது சேகரிப்பினை காட்சிப்படுத்தியிருந்தனர்
பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் குறித்து லட்சுமி நாராயணன் பேசுகையில்,
கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் முடிவுக்கு வந்த பிறகு பிரிட்டிஷ் இந்திய அதிகாரத்தின் கீழ் விக்டோரியா மகாராணி (1862–1901), [எட்வர்ட் VII (1903–1910 ), ஜார்ஜ் V (1911–1936 ), மற்றும் ஜார்ஜ் VI (1938–1947 ) மற்றும் எட்வர்ட் VII (1903-1910 ) ஆகியோரின்
உருவப்படங்கள் நாணயங்களில் இடம்பெற்றன. தங்கம், வெள்ளி மற்றும் செம்பு உலோகங்களில் நாணயங்கள் அச்சிடப்பட்டன. பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் வெறும் நாணயம் மட்டுமல்ல; அவை காலனித்துவ காலம், இந்திய நாணயங்களின் பரிணாமம் மற்றும் நவீன பணவியல் முறைக்கு மாறுதல் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் வரலாறாகும். நாணய வரலாறு அறிந்திட வரலாற்று நூல்களை அனைவரும் படிக்க வேண்டும் என்றார் .

