மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா
பொதுமக்களுக்கு சுவையான பிரியாணி வழங்கிய மஜகவினர்…!!!
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வு நகர செயலாளர் இம்தியாஸ் தலைமையில் நடைப்பெற்றது.மாநில துணைச் செயலாளரும்-மேலிட பொறுப்பாளருமான அரிமா.அஸாருதீன் அவர்கள் கலந்துக்கொண்டு கட்சி கொடியினை ஏற்றி சிறப்பித்தார்,மாவட்ட செயலாளர் அப்ரார் அஹமது அவர்கள் உடனிருந்தார்.மாவட்ட துணைச்செயலாளர் தாவூத் அவர்கள் மஜகவின் கொள்கை முழக்கங்களை எழுப்பினார். அதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு சுவையான பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் நவாஸ்,மாவட்ட அவைத்தலைவர் முஹம்மது ஆதம்,மாவட்ட துணைச்செயலாளர் நவாஸ்,மேல்விஷாரம் நகர பொருளாளர் அல்லாபகஷ்,வாலாஜா காதர் பாஷா மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.

