எடப்பாடி யார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு..
திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகம் சார்பில்.
ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்…
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடியார் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் மேற்குப் பகுதி கலகம் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் மற்றும் ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினர் டாக்டர் கார்த்திக் தலைமையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான மாதவரம் மூர்த்தி, மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சுபா தேவராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
இன்நிகழ்ச்சியில் பெண்களுக்கு புடவை தெருவோர கடை வியாபாரிகளுக்கு 20 பேருக்கு நிழற்குடை மற்றும் ஆண்களுக்கு வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்,
இதில் கழக நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

