பல்லாவரத்தில் சாலை விபத்தில் சிறுவன் பலி
சென்னை, ஆக.19: பல்லாவரத்தில் நடந்த சாலை விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
பல்லாவரத்தைச் சேர்ந்த சுஹேல் அகமது (15) என்பவர், தனது நண்பர் அப்துல் அகமது (17) ஓட்டிய KTM பைக்கில் பயணம் செய்துள்ளார். அந்த பைக் அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதியது.
இந்த விபத்தில் சுஹேல் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டிய அப்துல் அகமது உட்பட ஸ்கூட்டியில் பயணித்த மூவர் கடுமையான காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரீல்ஸ் எடுக்கவே பைக்கை அதிவேகமாக இயக்கியதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

