தமிழ்மொழி, இலக்கியம் குறித்த விழிப்புணர்வு உரைகள்

தமிழ்மொழி, இலக்கியம் குறித்த விழிப்புணர்வு உரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது

இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜா நூல் வெளியீடு – தமிழ்மொழி, இலக்கியம் குறித்த விழிப்புணர்வு உரைகள்

 

திருச்சி, அக். 27:

இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் சண் தவராஜாவின் “சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள்” நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

விழாவில் மணவைத் தமிழ் மன்ற செயலாளர், கவிஞர் நவமணி சுந்தரராஜ் தலைமை வகித்தார். இனிய நந்தவனம் பதிப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

நூல் வெளியீடு மற்றும் சிறப்புரை

புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர், கவிஞர் தங்கம் மூர்த்தி, சிறப்புரையாற்றி, முதல் தொகுதி நூலை வெளியிட்டார்.

அதனை மணவைத் தமிழ் மன்ற செயலாளர் நவமணி சுந்தரராஜ், நந்தவனம் சந்திரசேகரன், மேனாள் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, சூர்யா நினைவு அறக்கட்டளை நிறுவனர் சூர்யா சுப்பிரமணியன், திருச்சி மாநகராட்சி கல்வி குழுத் தலைவர் பொற்கொடி, மற்றும் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

மேனாள் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி, நூல் ஆய்வுரையாற்றி, வெளியீட்டின் இலக்கிய முக்கியத்துவத்தை விளக்கினார்.

சண் தவராஜா – ஏற்புரை

நூல் ஆசிரியர் சண் தவராஜா தனது ஏற்புரையில் கூறியதாவது:

“நாங்கள் சுவிட்சர்லாந்தில் அகதிகளாக புலம்பெயர்ந்தாலும், தமிழ் கலாசாரம், இலக்கியம், மொழி ஆகியவற்றை உயிரோடு தாங்கி நிற்கிறோம். இன்று அனைவரும் வாசிக்கின்றனர் புத்தகத்திலோ, இணையதளத்திலோ. ஆனால் எதை வாசிக்கிறோம் என்பதே முக்கியம். ஒரு புத்தகத்தை வாங்கும் போது அதன் முன்னுரை மற்றும் பின்அட்டைக் கருத்து தான் வாசகர்களை ஈர்க்கிறது. இன்னும் இன்று தமிழில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமை. நாங்கள் பிறமொழி கலப்பின்றி தமிழையே பேச முயல்கிறோம்,” எனத் தெரிவித்தார்.

 

வரவேற்பும் நன்றியும்

 

விழாவிற்கு திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார்.

கவிஞர் ஜனனி அந்தோணி ராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

பங்கேற்றவர்கள்

 

நிகழ்ச்சியில் நாவை சிவம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் முகமது ஷபி, நாளை விடியும் இதழ் ஆசிரியர் அரசெழியன், யோகநாதன், மனநல ஆலோசகர் லட்சுமி நந்தகுமார், பள்ளி ஆசிரியர் தேன்மொழி, சரஸ்வதி பாஸ்கரன், கவிஞர் புதுகை புதல்வன், கவிஞர் பீர்முகமது, சேது மாதவன், தேநீர் சந்திரசேகரன், தாளை இளவழகன், சின்னதுரை, வாழையூர் குணா, பொறியாளர் சுப்பையா உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தமிழ் இலக்கியம் உலகம் முழுவதும் பரவுவதற்கான வழிகாட்டி நிகழ்வாகவும், புலம்பெயர் தமிழர்களின் இலக்கிய பங்களிப்பை பாராட்டும் நாளாகவும் இந்நூல் வெளியீடு அமைந்தது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook